திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் : திருமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்
Sri Lanka Police
Jaffna
Trincomalee
Protest
By Independent Writer
யாழ்ப்பாணம் - நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இன்று (27) மாலை 05 மணிக்கு இந்த எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்ட சுயாதீன செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள், இளைஞர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் வாதிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச்சிலை இன்று (27) காலை யாழ்ப்பாணம் காவல்துறையினரால் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்.... பின்னணியில் சி.வி.கே : எழுந்துள்ள குற்றச்சாட்டு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |