நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்.... பின்னணியில் சி.வி.கே : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Sri Lanka Police Jaffna Selvarajah Kajendren ITAK
By Theepan Sep 27, 2026 04:59 AM GMT
Report

யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச்சிலை இன்றைய தினம் (27) யாழ்ப்பாணம் காவல்துறையினரால் பலவந்தமான முறையில் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தங்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் வழங்காமல் திடீரென வாகனங்களில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதணிகளுடன் வந்து அந்த சிலையை உடைத்துச்சென்றதாக தங்களுடைய ஆதரவாளர்கள் தெரிவித்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவத்திற்கு பின்னால் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இருக்கின்றார் என்ற வலுவான குற்றச்சாட்டையும் முன்வைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டன் முதல் இந்தியா வரை மனிதநேய நடைப்பயணம்

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டன் முதல் இந்தியா வரை மனிதநேய நடைப்பயணம்

இனவெறிச் செயற்பாடு 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலையை உடைத்துச் சென்றமையை வன்மையாக கண்டிக்கின்றேன். இது அநுர அரசாங்கத்தின் இனவெறியின் மற்றுமொரு முகத்தை வெளிப்படுத்துகின்றது.

நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்.... பின்னணியில் சி.வி.கே : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Removal Of Thileepan S Statue In Nallur By Police

அநுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக தன்னுடைய முகவர்களைப் பயன்படுத்தி தேர்தல் காலப்பகுதியில் நினைவேந்தல்களை அனுமதிப்போம், சிலைகளை நிறுவுவோம் என்று மேடை மேடையாகச் சொல்லியிருந்தார்கள்.

அநுர அரசு சார்பில் போட்டியிட்டவர்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்கான சந்தர்ப்பம் உறுதிப்படுத்தப்படும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தனர்.

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் ஊரெழுவில் அனுஸ்டிப்பு

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் ஊரெழுவில் அனுஸ்டிப்பு

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு 

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச போன்றோருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனப்பான்மை ஒரே மாதிரி இருக்கின்றது என்பதை இந்த செயற்பாடு உறுதிப்படுத்துகின்றது.

நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்.... பின்னணியில் சி.வி.கே : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Removal Of Thileepan S Statue In Nallur By Police

திலீபனின் திருவுருவச்சிலையை உடைத்து அகற்றியதன் மூலம் அநுர அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதுடன் இழிவுபடுத்தியிருக்கின்றது.

கடந்த 18ஆம் திகதி திலீபனின் நினைவேந்தலுக்காக நல்லூரில் உள்ள திலீபன் நினைவேந்தல் பூங்காவில் ஒலி பெருக்கிக்கான அனுமதியை பெற யாழ் மாநகரசபை மேஜரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பு கொண்டபோது அவர் கட்சி தலைமை தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து நான் சி.வி.கே. சிவஞ்ஞானம் ஐயாவுடன் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் என்னிடம் மிக காட்டமாக கேட்டார், நீங்கள் யாரை கேட்டு இந்த சிலை வைக்கின்றீர்கள், 26ஆம் திகதியோடு இந்த சிலை அகற்றப்படவில்லை என்றால் நான் இந்த சிலையை எடுப்பேன் என என்னிடம் தெரிவித்தார்.

நான் எதிர்பாக்கவில்லை இவர் இவ்வளவு கீழ்த்தரமாக செய்வார் என்று, காவல்துறையினரின் கைக்கூலிகளாக தமிழரசு கட்சி செயற்பட்டிருக்கின்றது என்பதுடன் தமிழரசு கட்சியும் அநுர அரசும் சேர்ந்து தான் இந்த கூட்டு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள். இந்த செயற்பாட்டிற்கு தமிழரசுக் கட்சி பொறுப்பேற்க வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் ஊரெழுவில் அனுஸ்டிப்பு

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் ஊரெழுவில் அனுஸ்டிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023