கனடாவிற்கான விமான சேவையை இடைநிறுத்திய முன்னணி நிறுவனம்
முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான பிளே ஏர்லைன்ஸ் விமான (Play Airlines) சேவை நிறுவனம் கனடாவிற்கான (Canada) சேவையை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், ஏற்கனவே முன் பதிவு செய்து கொண்டவர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலிவான விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக பிளேயர் எயார் லைன்ஸ் கருதப்படுகின்றது.
விமான சேவை
இந்தநிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியின் பின்னர் கனடாவிற்கான விமான சேவைகள் இடம்பெறாது என ப்ளே எயார்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐஸ்லாந்தில் இருந்து இந்த விமான சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், எரிபொருள் செலவு உள்ளிட்ட ஏனைய செலவுகள் அதிகரிப்பு காரணமாக சேவையை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |