இலங்கைக்கான விமான சேவை நிறுத்தம் - வெளிநாட்டு விமான நிறுவனம் அறிவிப்பு
இலங்கைக்கான விமான சேவை நிறுத்தம்
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் குறைந்த கட்டணசேவை விமான நிறுவனமான பிளை டுபாய் இலங்கைக்கான அனைத்து சேவைகளையும் இடைநிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போதைய நெருக்கடிகள் தீவிரமடைந்த பின்னர் ஒரு விமான சேவை நிறுவனம் தனது பயணச்சேவைகளை இடைநிறுத்தியமை இதுவே முதன் முறையாகும்.
பணத்தைத் திரும்பப் பெறலாம்
இலங்கையின் தற்போதைய நிலவரங்களையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ள குறித்த நிறுவனம் தமது விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள பயணிகள் அனைவரும் தமது பயணச்சீட்டுக்களுக்குரிய பணத்தைத் திரும்பப் பெறலாம் என அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் குறித்த விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தொடரும் மற்றொரு சேவை
இதேவேளை எதிஹாட் ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கொழும்பிற்கான எங்கள் விமானங்கள் வழக்கம் போல் சேவையில் ஈடுபடுகின்றன என தெரிவித்தார்.
