உக்ரைனின் எதிர்காலம் கேள்விக்குறியில்..!
தெற்கு உக்ரைனில் அணை சேதமடைந்து பெரும்பகுதி பெருவெள்ளத்தில் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது உணவு பண்டங்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் தானிய கிடங்குகள் பல வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் மேற்கு பகுதிக்கு தானியங்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டின் அறுவடை தற்போது அச்சுறுத்தலில் உள்ளதாக உக்ரைன் வேளாண் மக்களும் எச்சரித்துள்ளனர்.
மேலும் இந்த விடயம் உக்ரைனின் எதிர்கால பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் எதிர்காலம்
விவசாயத்திற்காக பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த நோவா ககோவ்கா அணை சேதப்படுத்தப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோதுமை, சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் உக்ரைன் நாடும் ஒன்று.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய நாளில் இருந்து உணவுப் பொருட்களின் மொத்த விலையில் கடும் உயர்வு ஏற்பட்டது.
இதுவே, பிரித்தானியாவில் உணவு பண்டங்களின் விலை உயர்வுக்கும், எகிப்து போன்ற குறிப்பிட்ட நாடுகளில் உணவு பற்றாக்குறைக்கும் முதன்மை காரணமாக அமைந்தது.
ஐரோப்பிய மக்களுக்கு பேரிடி
ககோவ்கா நீர்த்தேக்கத்தில் இருந்து தான் 1.4 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்ததாக உக்ரைனின் விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்பகுதியில் இருந்து ஆண்டுக்கு 1.19 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
தண்ணீர் பற்றாக்குறையால் தெற்கு உக்ரைனில் உள்ள விவசாய நிலங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாலைவனங்களாக மாறும் எனவும் விவசாய அமைச்சகம் அச்சம் தெரிவித்துள்ளது.
Ukraine has had to endure so many atrocities by the Russian invaders. Missiles strikes, artillery barrages, mass murders, children abductions, and now the floods of the destroyed Nova Kakhovka dam.
— (((Tendar))) (@Tendar) June 7, 2023
Not in a hundred years this will be forgiven.#Ukraine pic.twitter.com/muNSvkqGGl
மேலும், உக்ரைனில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழல், உலக நாடுகளில் உணவு தானியங்களின் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே விலை உயர்வால் தத்தளிக்கும் ஐரோப்பிய மக்களுக்கு இது ஒரு பேரிடியாக மாறும் என்றே அஞ்சப்படுகிறது.
29 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன
இதுகுறித்து உக்ரைன் உள்துறை அமைச்சா் இஹாா் க்ளிமென்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நோவா ககோவா அணையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, நீப்ரோ நதிக்கரையில் 29 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
நீரில் மூழ்கிய பத்து பெரிய குடியிருப்புப் பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள நீப்ரோ நதிக்கரை பகுதியைச் சோ்ந்தவை.
ஒன்பது குடியிருப்புகள் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள இடது கரைப் பகுதியைச் சோ்ந்தவை” என்று தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
இந்த அணை உடைப்பால் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மட்டுமின்றி ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலை உள்ளது.
இதனால் தாழ்வான அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுடன் சாலைகள், வா்த்தக நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயா்வான பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் உற்பத்தியகமான ஸபோரிஷியா மின்நிலைய அணு உலைகளைக் குளிரூட்டுவதற்கான நீா் இருப்பு குறையும் ஆபத்தும் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா வேதனை
உக்ரைன் நாட்டில் உள்ள ககோவ்கா அணை உடைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. ‘இந்தச் சூழலில் சுகாதாரமான குடிநீருக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்படக்கூடும்’ என்று வேதனை தெரிவித்துள்ளது.



