நாளை முதல் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை
நாட்டில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி நாளை முதல் நடைமுறைக்கு வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு
இதன்படி, பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும், சாதாரண தேநீரின் விலை 5 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொத்துரொட்டி மற்றும் ப்ஃரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 25ரூபாயினாலும் சிற்றுண்டி உணவுகளின் விலை 10 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஹர்சன ருக்ஷான் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் பல்வேறு கட்டணங்களும் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்