கீப்பரை குழப்பி போட்ட கோல் - ரொனால்டோவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி! (காணொளி)
நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில் ரொனால்டோவின் மிகப்பெரிய சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
மாண்ட்பெல்லியர் அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி பங்கேற்ற நிலையில் 3 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி தன்னிடம் வந்த பந்தை கோல்கீப்பரின் அருகே கொண்டு சென்று, அவரை ஏமாற்றி அசத்தலாக கோல் அடித்தார்.
ரொனால்டோவின் சாதனை
697வது கோல் இது டாப் 5 ஐரோப்பிய லீக்களில் மெஸ்ஸியின் 697 வது கோலாகும், இதன் மூலம் மற்றொரு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும், போர்த்துகல் நட்சத்திரம் ரொனால்டோவை விட 84 குறைவான ஆட்டங்களில் இதை மெஸ்ஸி சாதித்துள்ளார்.
HIGHLIGHTS | Montpellier 1 - 3 PSG I FABIAN RUIZ, MESSI, ZAÏRE-EMERY ⚽️
— Paris Saint-Germain (@PSG_inside) February 1, 2023
Revivez les meilleurs moments de la rencontre !#𝐌𝐇𝐒𝐂𝐏𝐒𝐆 pic.twitter.com/zBZsFpNAAY