மலையக மக்களின் சம்பள உயர்வு : இராதாகிருஸ்ணன் வெளியிட்ட அறிவிப்பு
மலையக மக்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதற்கு தாம் என்றுமே முட்டுக்கட்டையாக இருக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் (Velusami Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்
மலையகமக்கள்
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என கடந்த தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
மலையகமக்களுக்கான கௌரவமான வேதனத்தையே தாம் எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச 330 பேருக்கான சமாதான நீதவான் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |