கலஹா பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்பு: மூவர் கைது
Sri Lanka Police
Kandy
Nuwara Eliya
By Shadhu Shanker
கலஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ, நுவரெலியா பிரதான வீதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று(30) இரவு திடீரென யுக்திய வேலைத்திட்டதின் கீழ் கலஹா பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
நேற்றிரவு அவசர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யுக்திய வேலைத்திட்டம்
அனுமதி பத்திரம் இல்லாமல் வைத்திருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் முச்சக்கரவண்டி ஆகியவற்றை இதன் போது விஷேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கலஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 7 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்