வெளிநாட்டு வேலைவாய்ப்பு - இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
By Pakirathan
ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி, நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான குறித்த பெண், ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, 10 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவை வாங்கியுள்ளார்.
இருப்பினும் வேலைவாய்ப்பை பெற்றுத்தரவில்லை என பாதிக்கப்பட்ட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
விசாரணை
குறித்த முறைப்பாட்டிற்கமைய பணியக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்