இலங்கையில் அதிகரிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி
நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (Foreign Employment Bureau) தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் இந்த சம்பவங்களில் 27% அதிகரிப்பு காணப்படுவதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா (Gamini Senarath Yapa) குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டில், வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சட்டவிரோத நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது தொடர்பாக 3675 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், இது 2024 ஆம் ஆண்டில் 4658 முறைப்பாடுகளாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட132 பேர்
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் குறித்த மோசடிகள் தொடர்பாக 132 பேர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் கூறியுள்ளார்.
மேலும், உரிமம் பெற்ற 14 நிறுவனங்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில், 15 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு 132 பேர் கைது செய்யப்பட்டதுடன், உரிமம் பெற்ற 14 நிறுவனங்களின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதற்காக, 2024 ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் 900 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டில் 182 வழக்குகள் மட்டுமே மேற்கொள்ள முடிந்தன“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |