மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் : அநுர அரசை எச்சரிக்கும் மனோஜ் கமகே

Anura Kumara Dissanayaka Chandrika Kumaratunga Mahinda Rajapaksa Maithripala Sirisena
By Sathangani Jan 25, 2025 06:37 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) உயிரச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையிலும் அவருடைய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஆளும் தரப்பு சட்டத்தின் முன் பதிலளிக்க நேரிடும் என அவரின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே (Manoj Gamage) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஜனாதிபதி என்ன சொல்கிறார் என்று அமைச்சரவை உறுப்பினர்களுக்கு தெரியாது. அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது ஜனாதிபதிக்குத் தெரியாது. 

மகிந்த ராஜபக்சவின் மகன் அதிரடியாக கைது : வெளியான காரணம்

மகிந்த ராஜபக்சவின் மகன் அதிரடியாக கைது : வெளியான காரணம்

முன்னாள் ஜனாதிபதிகள்

மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதாக நினைத்துக்கொண்டு மனம் போனபோக்கில் பேசிக் கொள்கிறார்கள். மகிந்த ராஜபக்ச இந்த நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் : அநுர அரசை எச்சரிக்கும் மனோஜ் கமகே | Mahinda Security Govt Ignored Intelligence Report

அதேபோல் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga), மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆகியோர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரச உத்தியோகபூர்வ இல்லங்களை மீளப் பெறுவதாக ஆளும் தரப்பு குறிப்பிடுகிறது. ஒன்று வீடு வழங்கப்படும் அல்லது மாதம் 30 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதி தனது பதவிக்கு பொருத்தமான வகையில் பேச வேண்டும். ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொருத்தமான வீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீடு ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் வசிக்கக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும் என்பதை ஆளும்தரப்புத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மொட்டுக் கட்சியின் அடுத்த நகர்வு : ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் பிரசாரங்கள்

மொட்டுக் கட்சியின் அடுத்த நகர்வு : ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் பிரசாரங்கள்

இராணுவப் பாதுகாப்பு 

சட்டத்தை பற்றி போதிய அறிவு இல்லாவிடின் சட்ட நிபுணர்களிடம் ஆளும் தரப்பு ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் ஆளும்தரப்பு பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாகச் செயற்படக்கூடாது.

மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் : அநுர அரசை எச்சரிக்கும் மனோஜ் கமகே | Mahinda Security Govt Ignored Intelligence Report

மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுகிறது என்று புலனாய்வுப்பிரிவு முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் சலுகை தொடர்பில் ஆராய்ந்த குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்தபோதும் அதனைக் கருத்திற் கொள்ளாது அவருக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டு, பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு ஆளும்தரப்பும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை மற்றும் சலுகைகள் தொடர்பில் ஆராய்ந்த குழுவும் பொறுப்புக் கூறவேண்டும்.

இந்தக் குழுவின் முழுமையான அறிக்கையை தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். அதனைத் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

மகிந்தவின் பல கோடி பெறுமதியான விஜேராம வீடு : ஆளுங்கட்சி எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மகிந்தவின் பல கோடி பெறுமதியான விஜேராம வீடு : ஆளுங்கட்சி எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023