இஸ்ரேலில் யூத - அரபு கூட்டணி அரசை அமைக்கக் கோரி போராட்டம்: ஐசென்காட்டுக்கு அழுத்தம்
இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவரும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முக்கிய அரசியல் போட்டியாளருமான காடி ஐசென்காட்டின் (Gadi Eisenkot) வீட்டிற்கு வெளியே இடதுசாரி ஆர்வலர்கள் ஒன்றுகூடி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அரபுக் கட்சிகளுடன் இணைந்து புதிய யூத-அரபு கூட்டணி அரசாங்கத்தை உடனடியாக அமைக்குமாறு போராட்டக்காரர்கள் ஐசென்காட்டை வலியுறுத்தியுள்ளனர்.
அண்மைய தேர்தலில் அரபுக் கட்சிகள் கணிசமான வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் நெதன்யாகுவின் தரப்பினராலும் எதிர்க்கட்சிகளாலும் இலகுவாக ஆட்சியமைக்க முடியாத அரசியல் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள்
120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் 67 இடங்களுக்கான ஆதரவு தங்களிடம் இருப்பதாகத் தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், சம்பந்தப்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், அரபுக் கட்சிகள் பெற்ற வாக்குகள் தேர்தல் முறைகேடுகளால் அதிகரிக்கப்பட்டதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அரபுக் கட்சிகளுடன் இணைந்து ஐசென்காட் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே நெதன்யாகு இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |