பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து: 10 பேர் பலி
பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள சிந்து மாகாணத்தில், அரச மருத்துவமனை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நோயாளர் காவு வண்டியில் ஒட்சிசன் கொள்கலன் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாகர்பார்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்தில் நேற்று இரவு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களும் அடங்குவதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் அரிப் அசீஸ் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது பாரிய குண்டுமழை : ட்ரம்பின் பச்சைக்கொடிக்கு காத்திருக்கும் அமெரிக்க இராணுவம்
பாகிஸ்தான் ஜனாதிபதி
நோயாளர்களை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றிக்கொண்டிருந்தபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகக் காவல்துறை அதிகாரி கலீல் அப்ரோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விரைவானதும் வெளிப்படையானதுமான விசாரணையை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |