வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!
வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்ப பின்னணி தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் பெண்கள், தமக்கு 2 முதல் 5 வயதுக்கு உ்ட்பட்ட பிள்ளைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான குடும்பப் பின்னணி அறிக்கையை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் எனும் சட்டம் முன்னர் இருந்தது.
இந்தக் கட்டுப்பாடு பெண்களின் தொழில் உரிமைகளை பாதிப்பதாக பல மகளிர் அமைப்புகள் சுட்டிக்காட்டி வந்தன.
எதிர்நோக்கும் சிக்கல்
வெளிநாடு செல்லும் தகுதிகளை கொண்டிராத சில பெண்கள், போலியான குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்ப்பித்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லும்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, வெளிநாடு செல்வதற்கான தகுதிகளை கொண்டிருந்தும் குறித்து குடும்ப பின்னணி அறிக்கைகளை சமர்ப்பித்த போதிலும், அதிகாரிகள் சில காரணங்களால் அவற்றை தாமதப்படுத்தியதன் விளைவாக, பல பெண்களின் வெளிநாட்டு கனவு தகர்ந்து போயுள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு, வேலைவாய்ப்புகளுக்காக பெண்கள், வெளிநாடு செல்லும்போது குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாய நிபந்தனையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
