திருக்கோவில் பகுதியில் மீட்க்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டு துப்பாக்கிகள்
அம்பாறை , திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை என சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமிற்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து, சாகாமம் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போதே சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக சட்ட நடவடிக்கை
இவ்வாறு கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் இரண்டும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நேற்று மாலை திருக்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இத்துப்பாக்கிகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது தொடர்பான தீவிர விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினரும் , விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |