வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அறிவிப்பு..!
Manusha Nanayakkara
Migrant workers in Sri Lanka
Department of Immigration & Emigration
By Dharu
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லக்கூடாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லும் பெண்களின் குழந்தைகளை பாதுகாப்பதற்காக கடந்த வருடம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
அதனை மேலும் வினைத்திறனுள்ளதாக்கும் வகையில், மார்ச் 31ஆம் திகதி புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
பதிவு செய்வது தொடர்பான அறிக்கை
இதன்படி, 45 வயதை பூர்த்தி செய்யாத அனைத்து பெண்களும் பணிக்காக வெளிநாடு செல்லும் பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது தொடர்பான அறிக்கையை பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி