வந்த வழியே வெளியேற்றப்பட்ட வெளிநாட்டவர்: காரணம் இதுதான்!
போலியான பிரேசிலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று(23) கைது செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
அவர் இன்று அதிகாலை 5.45 மணிக்கு கட்டாரின் தோஹாவிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-218 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சிக்கிய போலி கடவுச்சீட்டு
வந்தவுடன், அவர் தனது விமான அனுமதியை முடிக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு கவுண்டருக்குச் சென்று தனது பிரேசிலிய கடவுச்சீட்டை வழங்கியுள்ளார்.
அதன்போது அங்கு பணிபுரியும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி, இந்த கடவுச்சீட்டை சந்தேகப்பட்டு, அவர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களுடனும் எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் அதை பரிந்துரைத்துள்ளார்.
நாடு கடத்தும் முடிவு
அதன்படி, அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளின் போது, இந்த பிரேசிலிய கடவுச்சீட்டு போலியானது என்பது தெரியவந்துள்ளது.
பின்னர், அவர் கொண்டு வந்த பயணப்பொதியை ஆய்வு செய்த அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது உண்மையான செனகல் கடவுச்சீட்டையும் நேபாளத்தின் காத்மாண்டுவுக்கான விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், செனகல் நாட்டைச் சேர்ந்த அந்த நபரை, கத்தாரின் தோஹாவிற்கே மீண்டும் நாடு கடத்துவதற்காக சிறிலங்கன் ஏர்லைன்ஸிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 4 மணி நேரம் முன்
