சைக்கிளுடன் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய வெளிநாட்டவர்கள் (காணொளி)
Bandaranaike International Airport
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Vanan
சைக்கிளுடன் வந்திறங்கிய வெளிநாட்டவர்கள்
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த சிலர் தம்முடன் சைக்கிளையும் கொண்டு வந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை உலக நாடுகள் மத்தியில் பேசுபொருளாக மாற்றியுள்ளது.
நாட்டில், ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை, உணவு நெருக்கடி, மின்சாரம் இன்மை, பொதுப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் என வெகுவிரைவில் நாடு முற்றிலும் ஸ்தம்பிதமடையும் அபாய நிலையை எதிர்கொண்டுள்ளது.
இலங்கைக்கு அந்நியசெலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறையான சுற்றுலாத்துறையும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள் தம்மோடு சேர்த்து சைக்கிளையும் கொண்டு வந்துள்ளனர்.
இன்றைய தினம் இது தொடர்பான காட்சிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவாகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவான காட்சிகள்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்