வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றோரில் ஏற்பட்ட பாரிய மாற்றம்
இலங்கையில் (Srilanka) இருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் ஜூன் மாதம் வரை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 1,43,037 பேர் எனப் புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 25,149 பேர் வெளிநாடு சென்றிருந்தனர்.
வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
அதேநேரம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஜனவரி மாதத்தில் 25,873 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
இருப்பினும், பெப்ரவரி மாதம் முதல் வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் அதே மாதங்களுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 5% குறைந்துள்ளதாக இந்த சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்