பாரிய படுகொலைகளை புலிகளின் தலையில் கட்டிய ஈபிடிபியினர்: அம்பலமான உண்மை
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் செய்த படுகொலைகள் தொடர்பில் எங்கும் சாட்சியமளிக்க தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன்னன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை யாழ். ஊடக அமையத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஆட்சிக்கு வரும் போது பொலித்தீன் பையுடன் வந்தவர்தான் டக்ளஸ் தேவானாந்தா தற்போது எத்தனை ஆயிரம் கோடி அவரிடம் உள்ளது.
அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்றி பெற்ற பணம்தான் டக்ளஸ் தேவானாந்தாவிடம் இருப்பவை.
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை படுகொலை செய்ததும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்தான்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரின் கொள்கைகள் தொடர்பில் முரண்பட்டமையால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
அதனை புலிகளின் தலையில் கட்டி விட்டனர் இதனுடன் இவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தால் நான் சாட்சியமளிப்பேன்.
அத்தோடு, பல படுகொலைகள் தொடர்பிலும் நான் சாட்சியமளிக்க தயார், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டாலும் மற்றும் நான் கொலைசெய்யப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை காரணம், அந்தளவிற்கு நாங்கள் பாதிக்கப்பட்டுளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடன் மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
