கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்

Bandaranaike International Airport Mahindananda Aluthgamage
By Sumithiran Mar 11, 2023 07:02 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்வதற்காக நேற்று (10) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.

மத்துகம நீதிமன்றில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மகிந்தானந்த அளுத்கமகே தனது வெளிநாட்டு பயணத்தை இரத்து செய்துள்ளார்.

வெளிநாட்டு பயணத்தடை

கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் | Former Minister Detained In Katunayake

எனினும், தமக்கு எதிராக மத்துகம நீதிமன்றத்தினால் அவ்வாறான எந்தவொரு வழக்கோ அல்லது வெளிநாட்டு பயணத்தடையோ விதிக்கப்படவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவிக்கையில், தரவு அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாகவே இவ்வாறான பிழை ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

பணி இடைநிறுத்தம் 

கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் | Former Minister Detained In Katunayake

இருப்பினும், உண்மையில் இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவரை விசாரணைகள் முடியும் வரை பணி இடைநிறுத்தம் செய்ய குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததன் பின்னர் குறித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் தரவுகள் தொடர்பான முறைமையில் ஏற்பட்ட பிழையை சரிசெய்து இன்று (11) வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023