மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட வியாழேந்திரன்!!
புதிய இணைப்பு
பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தனது பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் அமைச்சரை இன்று (08) பிற்பகல் பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரனை (S. Viyalendiran) பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அவரை எட்டாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தில் விசாரணை
இது குறித்த வழக்கு கடந்த முதலாம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் அளித்த தகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்தநிலையில், இன்று (08) அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
