மொட்டுக் கட்சியின் முன்னாள் எம்பிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka Parliament
SLPP
Court of Appeal of Sri Lanka
By Independent Writer
புதிய இணைப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க (Milan Jayathilaka) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த உத்தரவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் சற்றுமுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காணியொன்றின் வரைபடத்திற்கு அனுமதி வழங்கும்போது இடம்பெற்ற முறைகேடு காரணமாக அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் மேற்படி சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்