அடுத்த மாதம் நாடு திரும்புகிறார் கோட்டாபய - வெளியானது அறிவிப்பு
G. L. Peiris
Gotabaya Rajapaksa
Sri Lanka
By Sumithiran
வருகிறார் கோட்டாபய
முன்னாள் அதிபர் கோட்டாபய அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ ஓய்வு பெற்ற அதிபரின் சிறப்புரிமைகளைப் பெற உள்ளார்.
சிறப்புரிமைகளும் கிடைக்கும்
அதன்படி, கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் கோட்டாபய மற்றும் அவரது மனைவிக்கு கிடைக்கும்.
தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
