முன்னாள் அரச தலைவர் இன்று தென்கொரியாவிற்கு விஜயம்
today
Maithripala Sirisena
South Korea
visits
By MKkamshan
சமாதானம் தொடர்பிலான உலக மாநாடு ஒன்றில் உரையாற்றும் நோக்கில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) இன்று தென் கொரியாவிற்கு விஜயம் செய்கின்றார்.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு, இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
157 உறுப்பு நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆரம்ப நிகழ்வின் பிரதான உரையாற்றுவதற்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு , ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று தென்கொரியா புறப்பட்டுச் செல்லும் முன்னாள் அரச தலைவர் எதிர்வரும் 14ம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகின்றது.
