அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்!
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் புரூஸ் செனி உடல்நலக் குறைவால் காலமானார்.
தனது 84 வயதில் இன்று (04) அவர் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த நவீன துணை ஜனாதிபதி என போற்றப்படும் இவர், ஈராக் போர் கட்டமைப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதனிடையே நிமோனியா மற்றும் இதயம் சார்ந்த பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துணை ஜனாதிபதி
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் ஜனவரி 30 ஆம் திகதி 1941ஆம் ஆண்டு அவர் பிறந்துள்ளார்.

அமெரிக்காவின் 46 ஆவது துணை ஜனாதிபதியாக அவர் பதவி வகித்து வந்ததாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தலைமையிலான ஆட்சியில் 2001 முதல் 2009 வரை இரு முறை துணை ஜனாதிபதியாக அவர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்