மட்டக்களப்பிலும் புலிகளின் தங்கத்தை தேடிய நால்வர் சிக்கினர்- ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர்
Sri Lanka Police
Batticaloa
Gold smuggling
Liberation Tigers of Tamil Eelam
By Sumithiran
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்ததாக தெரிவிக்கப்படும் தங்கத்தை தேடிய எழுவர் கைது செய்யப்பட்ட நிலையில் மட்டக்களப்பிலும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம் இருக்கும் இடத்தை கண்டறியும் அதிசக்திவாய்ந்த ஸ்கான் இயந்திரத்துடன் காரில் பயணித்துக்கொண்டிருந்த போதே, கரடியனாறு பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை அதிகாரியும் உடந்தை
அதில் ஒருவர் காவல்துறை அதிகாரி என்றும் ஏனைய மூவரும் வர்த்தகர்கள் என்றும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள பிரதான காவல்துறை பரிசோதகர், மிரிஹான காவல் நிலையத்தில் இணைந்ததாக கடமையாற்றும் நிலையில் சுகயீன விடுமுறையை பெற்றுள்ளார் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி