இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் : ஈரானுக்கு மற்றுமொரு பேரிழப்பு (காணொளி)
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இன்று சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய துல்லியமான வான் தாக்குதலில் ஈரானின் புரட்சி காவல் படையின் மூத்த அதிகாரி உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்.
துல்லியமான-வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதல், சிரிய தலைநகரில் உள்ள மஸ்ஸேவின் சுற்றுப்புறத்தில் உள்ள பல மாடி கட்டடத்தை தரைமட்டமாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"துல்லிய இலக்குடன்" தரைமட்டமாக்கப்பட்டது
சிரியாவின் அரசாங்கத்திற்கும் அதன் முக்கிய நட்பு நாடான ஈரானுக்கும் நெருக்கமான குழுக்களின் ஒரு பகுதியாக இந்த பல மாடி கட்டடம் அதிபர் பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஈரானிய ஆலோசகர்களால் பயன்படுத்தப்பட்டது என்றும், அது முற்றிலும் "துல்லிய இலக்குடன்" தரைமட்டமாக்கப்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
? Netizens share videos of the alleged Israeli strike on a residential building in Damascus, Syria pic.twitter.com/668PRqrzk1
— Sputnik (@SputnikInt) January 20, 2024
இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர்
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரொய்ட்டர்ஸிடம் கூறுகையில், குண்டுவீச்சுக்குள்ளான கட்டடத்தில் சிலர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் தங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் காயமடையவில்லை என குறிப்பிட்டார்.
டமாஸ்கஸில் உள்ள அல்-மொவாசாத் மருத்துவமனையின் தலைவர் எஸ்ஸாம் அல்-அமீன், சனிக்கிழமை தாக்குதலைத் தொடர்ந்து தனது மருத்துவமனைக்கு ஒரு சடலம் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |