யாழ்ப்பாணத்திற்கு ஒரே நிகழ்விற்கு நான்கு ஹெலிகொப்டர்களில் வந்த நால்வர்
அண்மையில் யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கண்காட்சிக்காக நான்கு ஹெலிகொப்டர்களில் நான்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளதாக தேசிய மக்கள் படைத் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், அதிபரின் பிரதானி சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆகிய நால்வரும் இவ்வாறு வந்ததாக அவர் கூறினார்.
வவுனியாவில் நடாத்திய மக்கள் சந்திப்பில்
தேசிய மக்கள் சக்தி வவுனியாவில் நடாத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அமையவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதிகளோ இனவாதமோ இல்லாத மிதவாத தமிழ்த் தலைவர்களுடன் தமது கட்சி ஏற்கனவே கலந்துரையாடி வருவதாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |