உக்ரைனில் நான்காவது முக்கிய தளபதியை இழந்தது ரஷ்யா(photo)
ரஷ்யா - உக்ரைன் போர் 21வது நாளாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடந்த சண்டையில் ரஷ்ய மேஜர் ஜெனரல் ஓலெக் மித்யேவ் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் தாக்குதலின் போது மித்யேவ் இறந்ததாக உக்ரேனிய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ தெரிவித்தார்.
46 வயதான மித்யேவ் 150 வது மோட்டார் படைப் பிரிவின் தளபதி என்றும் இதற்கு முன்பு சிரியாவில் பணியாற்றியதாகவும் ஜெராஷ்செங்கோ கூறினார். இறந்த தளபதியின் படம் இணையத்தில் பரவியுள்ளது.
Attention❗️ Graphic photo❗️ - Today, the #Ukrainian National Guard's regiment Azov, which defends the besieged city of #Mariupol, eliminated a Russian Army Major General. To be identified soon. This is the 4th Rus. General in a row eliminated in #Ukraine for 20 days of war. pic.twitter.com/nZcKhiqnDR
— Victor Kovalenko ???? (@MrKovalenko) March 15, 2022