ISIS தளத்தின் மீது பிரான்ஸ் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா உறுதிப்படுத்திய தகவல்
பிரான்ஸ் (France) கடந்த வார இறுதியில் சிரியாவில் ISIS தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு (Sebastien Lecornu) தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் விமானப்படைகள், சிரிய பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ISIS தளங்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியது" என்று லெகோர்னு சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார்.
வான்வழித் தாக்குதல்
சிரியாவில் அமெரிக்கா நடத்திய இதேபோன்ற இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸ் வான்வழித் தாக்குதல் இரண்டு ISIS செயல்பாட்டாளர்களைக் கொன்றதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
Nos armées restent engagées dans la lutte contre le terrorisme au Levant.
— Sébastien Lecornu (@SebLecornu) December 31, 2024
Elles contribuent à la coalition internationale "Operation Inherent Resolve" (OIR), depuis 2014 en Irak et 2015 en Syrie.
Dimanche, des moyens aériens français ont procédé à des frappes ciblées contre des… pic.twitter.com/uwzOmcJDce
இந்த நிலையில், கடந்த நவம்பர் 27 ஆம் திகதி சிரியாவுடன் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற போராளி குழு போரை அறிவித்து, முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு
அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தலைநகரிலும் இந்த போராளி குழுக்கள் நுழைந்ததால் சிரியாவில் இருந்து ஜனாதிபதி ஆசாத் விமானத்தில் ரகசியமாக ரஷ்யாவிற்கு தப்பி ஓடினார்.
இந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி கொண்ட இஸ்ரேலும், சிரியாவின் முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை தன்வசம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |