பிரான்ஸ் தலைநகரில் மர்ம நபரால் அதிகாலையில் ஏற்பட்ட பதற்றம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸ்சிலுள்ள சர்வதேச கார் டு நோட் (Gare du Nord) தொடரூந்து நிலையத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை, பிரான்ஸ் நேரப்படி 6.45 மணியளவில், பரிஸ் மத்திய ரயில் நிலையத்தில் திடீரென ஒருவர் பொதுமக்களை கத்தியால் தாக்கத் தொடங்கினார்.
பலர் காயம்
இதன் போதே ஆறு பேர் காயமடைந்ததோடு, ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்திய நபர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி, அவரைக் கைது செய்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
தாக்குதல் நடத்திய நபரும் படுகாயமடைந்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin தெரிவித்துள்ள நிலையில், அவர் யார், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
