இலங்கையில் வெளிநாட்டு தம்பதியரிடம் இப்படியும் மோசடி
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Railways
By Sumithiran
இலங்கை வருகை தந்த வெளிநாட்டு தம்பதி
இலங்கை வருகை தந்த வெளிநாட்டு தம்பதியருக்கு அதிக விலைக்கு ரயில் பயணச்சீட்டை இணையத்தில் விற்பனை செய்த நபர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
நேற்று (13) பிற்பகல் சந்தேக நபர் கண்டி புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதிக விலையில் ரயில் பயணச்சீட்டு விற்பனை
சந்தேக நபர் 2,600 ரூபா பெறுமதியான ரயில் பயணச்சீட்டை வெளிநாட்டு தம்பதியொருவருக்கு 7,300 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு ரயில் பயணச்சீட்டும் சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டி பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி