பாரிய எரிபொருள் மோசடி - கையும் களவுமாக சிக்கிய கும்பல்
Sri Lanka Police
By pavan
எரிபொருள் தாங்கிகளை பயன்படுத்தி எரிபொருளை எடுத்து, அதேயளவு மண்ணெண்ணெய் கலந்து விற்பனைக்கு விநியோகிக்கும் பாரிய மோசடி கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாபிம பகுதியில் உள்ள இரகசிய இடமொன்றிற்கு எரிபொருள் தாங்கிகளை கொண்டு சென்று எரிபொருளை கலக்க முற்பட்ட சமயம் காவல்துறையினர் சந்தேகநபர்களை சுற்றிவளைத்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி