மாணவர்களுக்கு இலவச உணவு! கல்வி அமைச்சு திட்டவட்ட அறிவிப்பு
Ministry of Education
Sri Lanka
Sri Lankan Schools
By Shalini Balachandran
ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அரசினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சு
குறித்த இந்த உணவு வழங்கும் திட்டத்திற்க்காக 16.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட செயன்முறையின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையில் உணவு தயாரிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி