மைத்திரி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சி சில நாட்களிலேயே வீழ்ச்சி
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியான சுதந்திர மக்கள் முன்னணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு சில நாட்களிலேயே வீழ்ச்சியை காண ஆரம்பித்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
சில நாட்களிலேயே வீழ்ச்சி
மேலும் கருத்து தெரிவிதத் அவர், சுதந்திர மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்ட போது பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் தற்போது அவர்கள் கூட்டணியை மேல் நோக்கி கொண்டு செல்வதற்கு பதிலாக கீழ் நோக்கி கொண்டு செல்கிறார்கள்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை தேட தற்போது கூட்டணி ஆரம்பித்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டணியில் தலைமைத்துவ சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் 30 பேர் இருக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை எதிர்காலத்தில் காண முடியும். இது குறித்து நாம் வருத்தமடைகிறோம்” - என்றார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
