இந்திய கடவுசீட்டை வைத்திருப்போருக்கு அரிய வாய்ப்பு - லண்டன் குடியுரிமை நிறுவனம் வெளியிட்ட சிறப்பு தகவல்
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் வழங்கிய தனிப்பட்ட தரவுகளின் அடிப்படையில், லண்டனைச் சேர்ந்த உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ், 2023 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுசீட்டு குறியீட்டை வெளியிட்டுள்ளது.
குறித்த தரவரிசையின்படி ஜப்பான் முதலாவது இடத்தை பிடித்துள்ளதன் காரணமாக, அந்நாட்டு கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஹென்லி கடவுசீட்டு இன்டெக்ஸ் தரவரிசையின்படி, உலகின் சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா

இதற்கு முன்னர் இந்தியா 87வது இடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது இரண்டு படிகள் முன்னேறி 85வது இடத்தை பிடித்துள்ளது.
தரவரிசையின்படி இந்தியா 85வது இடத்தை பிடித்துள்ளதன் காரணமாக, இந்திய கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 59 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. ஜப்பான் — விசா மதிப்பெண் : 193
2. சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா — விசா மதிப்பெண் 192
3. ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் — விசா - மதிப்பெண் 190
4.பின்லாந்து, இத்தாலி மற்றும் லக்சம்பர்க் — விசா - மதிப்பெண் 189
5.ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் — விசா - மதிப்பெண் 188
6.பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் யுனைடெட் கிங்டம் — விசா - மதிப்பெண் 187
7. பெல்ஜியம், செக் குடியரசு, நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா — விசா - மதிப்பெண் 186
8. ஆஸ்திரேலியா, கனடா, கிரீஸ் மற்றும் மால்டா — விசா - மதிப்பெண் 185
9. ஹங்கேரி மற்றும் போலந்து — விசா - மதிப்பெண் 184
10. லிதுவேனியா மற்றும் ஸ்லோவாக்கியா — விசா - மதிப்பெண் 183