இராணுவத்தினர் கெடுபிடி - துயிலுமில்லத்தின் முகப்பு வளைவு உடைப்பு..! முள்ளியவளையில் பதற்றம் ( காணொளி)
Sri Lanka Mirror
Mullaitivu
Maaveerar Naal
Maaveerar Naal 2022
By Kiruththikan
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லதின் முகப்பு வளைவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரால் உடைக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறவில்லை எனக்கூறி இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாவீரர் துயிலும் இல்லதின் முகப்பு வளைவை உடைத்து காவல் நிலையத்துக்குள் கொண்டு சென்றுள்ளார்கள்.
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை செய்துகொண்டு மக்கள் நின்றவேளை அவ்விடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் நுழைவாயில் வளைவு மற்றும் கொடிகள் என்பனவற்றை அறுத்தெறிந்து அட்டகாசம் புரிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து ஏற்பாடுகளை செய்தவர்களை சுடுவோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர் மேலும் அனைத்து பொருட்களையும் ஏற்றி சென்றுள்ளனர்.
இதன் காரணமாக முள்ளியவளை மாவீரர் துயிலுமிலத்தில் பதற்றம் நிலவி வருகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்