சுமந்திரன் - சி.வி.கேயிடமிருந்து அநுரவிற்கு பறந்த அவசர கடிதம்
நேரடியாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தாருங்கள் என்று கோரி இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் (M. A. Sumanthiran) ஒப்பமிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
“தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு” என்ற தலைப்பில் அமைந்த அக் கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள், எமது கட்சியின் சமீபத்திய மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக உங்களுக்கு எழுத முடிவு செய்யப்பட்டது.
முதன்மையான தமிழ் அரசியல் கட்சி
நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது. உங்கள் தேர்தல் அறிக்கையிலும் மற்றும் பல அறிவிப்புகளிலும் இந்த மிக முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பீர்கள் என நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள்.
இருப்பினும், கடந்த ஒரு வருடமாக இந்த விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதன்மையான தமிழ் அரசியல் கட்சியாக, மேற்கூறிய பிரச்சினை தொடர்பாக உங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம்.
அந்த வகையில் உங்களைச் சந்திக்க கீழே கையொப்பமிடப்பட்ட தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் எங்கள் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட குழு உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் நேரத்தில் உங்களைச் சந்திக்க ஒரு நேரத்தை ஒதுக்கித் தருமாறு வேண்டுகிறோம் என்று உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
