யாழ். நகரின் மையப் பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்
யாழ். நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். போதனா வைத்தியசாலையின் பின்புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியிலேயே நேற்றைய தினம் (08.02.2026) ஞாயிற்றுக்கிழமை இந்த வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், துப்பரவு செய்த வேளை துப்பரவு பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றினை அவதானித்துள்ளனர்.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள்
அது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பொதி தொடர்பில் சோதனையிட்டனர்.
அதனுள் கையெறிகுண்டு, கலிபர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன.
பொதியினுள் உள்ள வெடிபொருட்கள் தொடர்பில் யாழ் . நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
அதன் பின்னரே மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்னர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |