மகிந்தவிடம் உள்ள பெறுமதிமிக்க சொத்து இது தானாம்
தான் சேர்த்துள்ள “மக்கள்” என்ற சொத்து மற்ற எல்லா சொத்துகளையும் விடவும் பெறுமதி வாய்ந்தது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில், கார்ல்டன் இல்லத்தில் தமது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ச தம்மை சந்திக்க வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்களுடன் அரட்டை
“லெப். கோணலாகவும் பாதுகாப்புச் செயலாளராகவும் பின்னர் உயிர்களை காப்பாற்றிய ஜனாதிபதியாகவும் இருந்த கோட்டாபயவினால் நான் கௌரவிக்கப்படுகிறேன். அவர் எப்போதும் மக்களை பாதுகாத்தார் என்பதில் எனக்கு பெருமை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போர் முடிவுக்கு வந்த நாளே என் வாழ்நாளின் மிக மகிழ்ச்சியான செய்தியாகும். அந்த தருணத்தில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ எனக்கு அருகில் இருந்தார்.
அந்த மகிழ்ச்சியை நாங்கள் புன்னகையுடன் பகிர்ந்து கொண்டோம் என்று மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் கடந்த சில நாட்களாக கார்ல்டன் இல்லத்துக்கு வரும் மக்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்ததுவும் மக்களின் புன்னகைதான் உண்மையான சொத்து எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
