இலங்கையில் தொடர்ந்து உயர்வடையும் தங்க விலை
இலங்கையில் இன்று (09) தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,400 ரூபாயாக, விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில் 24 கரட் தங்கம் ஒரு கிராம் 49,375 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 45,675 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

முன்னதாக கடந்த 7ஆம் திகதி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 392,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |