யாரும் பீதியடைய வேண்டாம் - அரசாங்கம் விடுத்த கோரிக்கை
போதைப்பொருள் வலையமைப்பில் பாதுகாப்புப் படையினருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகள் வெளிப்பட்டு வருவதால் யாரும் பீதியடைய வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் போதைப்பொருள் வலையமைப்புடன் கொண்டிருந்த தொடர்புகளை தெரிவிக்குமாறு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் செய்தியாளர்கள் கோரிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தொடர்புகள்
அமைச்சரவை பேச்சாளர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், "சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்ட பின்னர், அவரது வெளிப்பாடுகள் மூலம் சில ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
மேலும் அந்தத் தகவல்களுக்கமைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்.
இதற்கான அரசியல் தொடர்புகள் எதிர்காலத்தில் படிப்படியாக வெளிப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
