லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு
மாதாந்த விலைத் திருத்தத்திற்கு அமைய பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் பழைய விலையிலேயே எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 3,690 ரூபாயாகவும் 05 கிலோ கிராம் சிலிண்டர் 1,482 ரூபாயாகவும் 02.3 கிலோ கிராம் 694 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லாப் சமையல் எரிவாயு விலை
இதேவேளை கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 4,250 ரூபாயாக இருந்த12.5 கிலோ கிராம் லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4,330 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
அதேபோன்று 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 1,742 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |