அமெரிக்காவிற்கு தொடரும் : இழப்பு : ஈரானின் ஏவுகணை தாக்குதலில் போர் விமானம் பலத்த சேதம்
பாரசீக வளைகுடா வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் F-16 போர் விமானத்தை, தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சேதப்படுத்தியதாக ஈரானிய இராணுவம் அறிவித்துள்ளது. இதனால், அந்த விமானம் தனது பணியைப் பாதியிலேயே கைவிட்டு, அப்பகுதியில் அருகிலுள்ள விமான நிலையமொன்றில் அவசரகால தரையிறக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரானிய இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் இதனைத் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை இரவு, நாட்டின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பின் கீழ் இயங்கும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், பாரசீக வளைகுடா வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த அமெரிக்காவின் F-16 போர் விமானத்தை அடையாளம் கண்டன.
ஏவுகணை தாக்குதல்
இந்த நடவடிக்கையின் போது, வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த அமெரிக்க F-16 விமானத்தைப் பின்தொடர்ந்து, அதன் மீது ஏவுகணை ஒன்றை ஏவின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஏவுகணை விமானத்திற்கு அருகிலேயே வெடித்ததில், அமெரிக்கப் போர் விமானம் சேதமடைந்தது. இதன் விளைவாக, விமானி தனது பணியைப் பாதியிலேயே கைவிட்டு, அப்பகுதியில் அருகிலுள்ள விமான நிலையமொன்றில் அவசரகால தரையிறக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |