இந்து சமுத்திரத்தில் மீண்டும் நிலநடுக்கம் : இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை
இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ள தீவுகளில் ஒன்றான பண்டா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ரிக்டர் அளவில் 6.8 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளதாக சர்வதேச புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3.12 மணியளவில் 156 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமி ஆபத்து
எனினும் இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்புகள் பாதுகாப்பானதாக உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில் அண்மையிலும் 6.6 மெக்னிடுயிட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |