ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி தீப்பற்றியது கப்பல்
ஹோர்முஸ் அருகே கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய்க் கப்பலில் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே வெளிநாடுகளின் சரக்குக் கப்பல்கள் அனுமதிக்கப்படும் நிலையில், மற்ற பாதைகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளன
ஈரானிய கடற்படையின் அறிவிப்பு
ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதி வழியாகச் செல்ல முயன்ற எண்ணெய்க் கப்பல் ஒன்று கண்ணிவெடியில் சிக்கிசிக்கி தீப்பற்றி எரிந்ததாக, ஈரானிய கடற்படை இன்று (நவ. 21) அறிவித்துள்ளது.

இதில், தாக்குதலில் சிக்கிய எண்ணெய்க் கப்பல் ஈரானின் எச்சரிக்கையைப் புறக்கணித்து, ராடர் கருவிகளை அணைத்தபடி அவ்வழியாகச் சென்றதாக, ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணித்தவர்களின் நிலை
இருப்பினும், இந்தத் தாக்குதலில் சிக்கிய கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது குறித்தும், அதில் பயணித்த மாலுமிகளின் நிலை குறித்தும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

ஏற்கெனவே, ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸ் வழியாகச் செல்ல முயற்சிக்கும் கப்பல்கள் தொடர்ந்து கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி வருகின்றன.
மேலும், அவ்வழியாகச் செல்லும் தங்கள் ஆதரவு நாடுகளின் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கும் எனக் கூறப்பட்டது.
கடந்த நவ.14 ஆம் திகதி மட்டும் ஹோர்முஸ் அருகே 5 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |