எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு: ச.தொ.ச விற்பனை நிலையங்களில் புதிய திட்டம் அறிமுகம்
Sri Lanka
Lanka Sathosa
Sri Lanka Food Crisis
By Harrish
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் (Fish) தட்டுப்பாட்டை குறைப்பதற்கு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.கே. மார்க் (J.A.K. Mark) தெரிவித்துள்ளார்.
அதன்படி, நியாயமான விலையில் புதிய மீன்கள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஆரம்பகட்ட நடவடிக்கை
இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் Frozen Fish பொதிகள் நியாயமான விலையில் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், தெரிவு செய்யப்பட்ட 21 ச.தொ.ச விற்பனை நிலையங்களில் ஆரம்பகட்டமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
