எரிபொருள் நெருக்கடி - ரஷ்யா விரையும் அமைச்சர்கள்
எரிபொருள் பற்றாக்குறை
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் நாடளாவிய ரீதியில் பெரும் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய சேவைகள் உட்பட பல சேவைகள் முடங்கும் நிலையில் உள்ளன.
அமைச்சர்கள் ரஷ்யா பயணம்
இந்த நிலையில் எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்ள அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவிற்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரண்டு அமைச்சர்களும் நாளை (27) ரஷ்யா செல்லவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் பெற மறுப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மற்றுமொரு இராஜதந்திர விவகாரத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்வதாகவும் இதன்போது இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
